தமிழக அரசை கண்டித்து நாளை தலைமை செயலகம் நோக்கி பாஜக பேரணி..!!


தமிழக அரசை கண்டித்து நாளை தலைமை செயலகம் நோக்கி பாஜக பேரணி..!!
x

கோப்புப்படம்

தமிழக அரசை கண்டித்து நாளை தலைமை செயலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. இந்த சூழலில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நாளை பேரணி நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதன்படி தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக நாளை காலை 10 மணிக்கு அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story