பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்


பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Oct 2022 7:45 PM GMT (Updated: 22 Oct 2022 7:46 PM GMT)

சேலம் சிவதாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கக்கோரி பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

சூரமங்கலம்:-

சேலம் சிவதாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கக்கோரி பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் சிவதாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கக்கோரி பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.சேலம் சிவதாபுரம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கக்கோரி பா.ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 2 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தாம்பட்டி ஏரி

சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உள்ளது. மேலும் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள் சரியாக தூர் வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது, இதனால் சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்த உபரி நீர் சேலம் சிவதாபுரம், மெய்யன் தெரு, பனங்காடு, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுக்குள் புகுந்துள்ளது.

மேலும் சிவதாபுரம் மெயின் ரோட்டில் முழங்கால் அளவுக்கு மேலாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுபவர்கள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாக்கி உள்ளனர்.

சாலை மறியல்

மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை அவர்களே வெளியேற்றி வருகின்றனர். சேலத்தாம்பட்டி ஏரி எப்போது நிரம்பி வழிந்தாலும், சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்து விடுவதால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் உள்ளனர்,

எனவே ஏரி தண்ணீர் ஊருக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் சேலத்தாம்பட்டி ஏரி தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதை தடுக்கக்கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் சேலம்-இளம்பிள்ளை ரோட்டில் சிவதாபுரம் பகுதியில் பா.ஜனதா கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் அருண்குமார், பாலமுருகன், பூங்கொடி, கார்த்தி, வெங்கடாஜலம், ராணி, வேலுசாமி, இருசாகவுண்டர், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

16 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 16 பேரை குண்டு கட்டாக கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

----------


Next Story