காங்கயம் அருகே விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்


காங்கயம் அருகே விவசாயிகள்  வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
x

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

திருப்பூர்

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கயம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கீழ் பவானி வாய்க்கால்

கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. வாய்க்கால் நீர் போக உரம்பு நீர் பாசனம் மூலம் மறைமுகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில் 124 மையில் நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க அரசு முடிவு செய்தது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பால் கான்கிரீட் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த திட்டத்தை தற்போதைய அரசு மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிரதான வாய்க்கால் கரையோரங்களில் அரணாக நிற்கும் மரங்கள் வெட்டப்படும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு வாய்க்கால் கரையோரம் உள்ள கிணறுகளில் நீரின் அளவு வெகுவாக குறையும். மேலும் வாய்க்கால் கசிவு நீர் மூலம் பாசனம் பெறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். போது மக்களுக்கும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகும்.

போராட்டம்

இந்த திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன கால்வாய் விவசாயிகள் மரவாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட திட்டம்பாளையத்தில் விவசாயிகளின் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் அதே பகுதியில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சிபுரம், கத்தாழைமேடு, செம்மங்குளிபாளையம், வாய்க்கால்மேடு, பாரவலசு, தாமரைக்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு கொடிகள் கட்ட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story