சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் பலி


சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் பலி
x

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் பேபி என்று தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டுவந்தது. இந்த ஆலையில் பலர் வேலைபார்த்து வந்துள்ளனர். இன்று மதியம் உணவு இடைவேளைக்கு பின்னர் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில ஆலையின் 5-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகினர். மேலும் விபத்தின் போது பணியில் இருந்த 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இவர்கள் பட்டாசு ஆலையில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுப்பட்டு, இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story