ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு


ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபர் பிணமாக மீட்பு
x

ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் மூழ்கிய வாலிபரை போலீசார் பிணமாக மீட்டனர்.

காஞ்சிபுரம்

அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 32). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி அதே பகுதியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் குளிக்க சென்றார். ஏரியல் இறங்கிய சிறிது நேரத்தில் விநாயகம் ஏரியில் மூழ்கி மாயமானர். உடன் வந்த நண்பர்கள் தேடியும் விநாயகத்தை காணவில்லை. இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ஸ்ரீபெரும்புதூர் தீயனைப்பு துறை வீரர்களின் உதவியுடன் விநாயகத்தை தேடினர். இந்த நிலையில் நேற்று இரவு விநாயகத்தை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story