புழல் சிறையில் புத்தக கண்காட்சி


புழல் சிறையில் புத்தக கண்காட்சி
x
தினத்தந்தி 23 April 2023 10:00 PM GMT (Updated: 23 April 2023 10:01 PM GMT)

புழல் சிறையில் புத்தக கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் சிறையில் நேற்று புத்தக கண்காட்சி நடைபெற்றது. புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த புத்தக கண்காட்சியை கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, "நேரு, காந்தி, மண்டேலா போன்ற தலைவர்கள் அனைவரும் தலைவர்களாகி சிறைக்கு வந்தவர்கள். நீங்கள் தலைவர்களாகி வெளியே செல்ல வேண்டும்" என கைதிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் புஜாரி, சிறைத்துறை டி.ஐ.ஜி.கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story