திண்டுக்கல் ஐ.லியோனி எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


திண்டுக்கல் ஐ.லியோனி எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 March 2023 8:58 PM IST (Updated: 25 March 2023 10:05 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் ஐ. லியோனி எழுதியுள்ள "வளர்ந்த கதை சொல்லவா" புத்தகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி எழுதிய, வளர்ந்த கதை சொல்லவா என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை அறிவாலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் எழுதிய நூலை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், திண்டுக்கல் ஐ.லியோனி எழுதிய புத்தகத்தை வெளியிட்டு அவரை வாழ்த்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். திண்டுக்கல் ஐ.லியோனி இதுவரையில் பேச்சு வடிவிலேயே கதைகளை சொல்லிவந்தார். தற்போது தான் அவர் தான் வாழ்ந்த கதையை வளர்ந்த கதையை எழுத்து வடிவில் வெளியிட்டு இருக்கிறார்.

அவருக்கு பேச்சு போலவே எழுத்தும் வந்துள்ளது. எல்லோருக்கும் பேச்சும், எழுத்தும் கைவராது. அவருடைய எழுத்தும் சுவையாக உள்ளது. கருத்தரங்கம், பொதுக்கூட்டம், பட்டிமன்றம், விவாத மன்றம், பாட்டுக்கச்சேரி, போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பார்வையாளர்களை தன்வசப்படுத்தக்கூடிய ஆற்றல் அவருக்கு இருப்பதால், அவரை நாவரசர் என கூறலாம்.

அவருடைய பட்டிமன்ற பேச்சை நான் பலமுறை கேட்டுள்ளேன். அவருடைய பேச்சால் நான் அவருடைய ரசிகராகவே மாறிவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story