திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா; புலி வாகனத்தில் சாமி வீதியுலா
திருத்தணி முருகன் கோவிலில் சித்தரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர்
தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று மாலை 4.30 மணிக்கு உற்சவர் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் புலி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளி தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Related Tags :
Next Story