வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு நடைபெற்றது.

மதுரை

மதுரை பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 51). சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 18 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சையது முஸ்தபா பெருங்குடி போலீசில் புகார் அளித்தார்.

அதில் கடந்த மார்ச் மாதம் தனது வீட்டில் இருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து புகார் தெரிவித்தேன். மேலும் வீட்டில் இருந்து கண்காணிப்பு கேமராவில் அந்த காட்சி பதிவாகி இருந்ததால் அது இணையதளங்கள், செய்திகளில் ஒளிபரப்பானது. எனவே இந்த முறை திருட்டில் ஈடுபட்டவர்கள் கண்காணிப்பு கேமராவில் இருந்த ஹார்டு டிஸ்க் மற்றும் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டதாக தெரிவித்து உள்ளார். அதன் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story