வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு...!


வீட்டின் பூட்டை உடைத்து  நகை,பணம் திருட்டு -  மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை வீச்சு...!
x

பண்ருட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அடுத்துள்ள எல்.என்.புரம் பகுதியில் வசித்து வருபவர் சிதம்பரம் (வயது 66). இவரது மனைவி வாசுகி (60). சிதம்பரம் தின்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசிக்கும் தனது மகள் பிரியா வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார்.

பின்னர், இன்று காலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் வீட்டினுள் சென்றபோது அங்கிருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 60 ஆயிரத்தை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சிதம்பரம் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story