கடையின் பூட்டை உடைத்து திருட்டு


கடையின் பூட்டை உடைத்து திருட்டு
x

ஆவடி அருகே கடையின் பூட்டை உடைத்து செல்போன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

திருவள்ளூர்

ஆவடியை அடுத்த திருநின்றவூர் நெமிலிச்சேரி தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் உத்திரமுத்து (வயது 39). இவர் திருநின்றவூர் பிரகாஷ் நகர் மெயின் ரோட்டில் செல்போன் உதிரிபாகங்கள் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார். இதையடுத்து நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து உத்திரமுத்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story