திருவள்ளூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


திருவள்ளூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x

திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த பாண்டூர் கிராமத்தில் பாசூரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை வழக்கப்போல் நேற்று முன்தினம் சாமி தரிசனம் முடிந்த பின்னர் கோவில் ஊழியர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல கோவில் ஊழியர் நடை திறக்க சென்றார்.

அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், அந்த கோவிலின் அருகே உள்ள நாகாத்தம்மன் புற்றுக் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அங்கிருந்த அம்மன் போட்டு, கால் சவரத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும், அந்த கோவிலின் அருகே உள்ள மற்றோரு கோவிலான பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் ஒரு பவுன் தங்க நகையும், வெள்ளி பொருட்களையும் திருடி சென்றனர்.

இந்த சம்பவங்கள் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கோவிலின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் யார்? என தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் பாண்டூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story