வாழப்பாடியில்வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை திருட்டு


வாழப்பாடியில்வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 31 Jan 2023 2:36 AM IST (Updated: 31 Jan 2023 2:51 PM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6½ பவுன் நகை திருட்டு போனது.

சேலம்

வாழப்பாடி

வாழப்பாடி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம், தேங்காய் வியாபாரி. இவருடைய மனைவி பச்சியம்மாள் (வயது 50). கணவன்-மனைவி இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்றனர். பின்னர் 29-ந் தேதி காலையில் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த 6½ பவுன் நகைகள் மற்றும் செல்போன் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்.


Next Story