விவசாயியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது
திண்டிவனம் அருகே விவசாயியை கத்தியால் வெட்டிய அண்ணன் கைது
விழுப்புரம்
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள தாதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சரவணன்(வயது 35). விவசாயியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது அண்ணன் ஆனந்தன்(41) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று நிலத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சரவணனை ஆனந்தன் திடீரென வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் திட்டி மறைத்து வைத்து இருந்த கொடுவா கத்தியால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சரவணன் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story