புகையிலை விற்ற அண்ணன், தம்பி கைது


புகையிலை விற்ற அண்ணன், தம்பி கைது
x

சின்னதாராபுரத்தில் புகையிலை விற்ற அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனையிட்டனர். அப்போது 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமையாளர்களான தனுஷ்கோடி (வயது 62), பொன்னுச்சாமி (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் அண்ணன், தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story