அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து


அண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து
x

பெற்றோரை திட்டியதை தட்டிக்கேட்டஅண்ணன்-தம்பிக்கு கத்திக்குத்து விழுந்தது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துசாமி மகன்கள் முருகேசன் (வயது 52), விவசாயி ரமேஷ்(50), சிவக்குமார் (47), இந்த நிலையில் இவர்களின் பூர்விக வீட்டை முருகேசன், ரமேஷ் ஆகிய 2 பேரும் பிரித்து கொண்டனர். வீட்டிற்கு பதில் சிவக்குமாருக்கு வேறு இடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரமேசின் பாகத்தில் பெற்றோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் தனது பெற்றோர் என்றும் பாராமல் அவர்களை திட்டி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு ரமேஷ் கூறியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட முருகேசன், சிவக்குமார் ஆகியோரை ரமேஷ் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ரமேஷ் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story