பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
15 சதவீத பென்சன் மாற்றத்தை கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிளை தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். முன்னதாக செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் சிவசாமி கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோாரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் சப்தரிகி, சசிதரன், சாகுல் அமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story