மழை வேண்டி நூதன வழிபாடு
கருகிய குறுவை பயிர்களை காப்பாற்ற மழை வேண்டி நூதன முறையில் வழிபாடு விவசாயிகள் நடத்தினர்.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 15 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிக்கு போதிய அளவு வந்து சேராததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் கருகின. இந்தநிலையில் கருகிய குறுவை பயிர்களை காப்பாற்ற மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். இந்தநிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கருகிய குறுவை பயிர்களை காப்பாற்ற வருண பகவானிடம் மழை பெய்ய வேண்டி கொடும்பாவி இழுத்து நூதன முறையில் வழிபாடு நடத்தினர். அப்போது களிமண்ணால் கொடும்பாவி கட்டி வயிற்று நடுவே தீச்சட்டி வைத்து தெருத்தெருவாக மேளதாளம் அடித்தபடி ஒப்பாரி வைத்து கொடும்பாவி இழுத்து சென்றனர்.
Related Tags :
Next Story