அதிக பாரம் ஏற்றி சென்ற லாரியில் இருந்து தவறி விழுந்த தவிட்டு மூட்டைகள்


அதிக பாரம் ஏற்றி சென்ற லாரியில் இருந்து தவறி விழுந்த தவிட்டு மூட்டைகள்
x

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரியில் இருந்து தவறி விழுந்த தவிட்டு மூட்டைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூர்

நொய்யல்,

கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலையில் உள்ள ஒரு வங்கி அருகே ஒரு லாரியில் அதிக அளவில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த தவிடு மூட்டைகளை தார்ப்பாய் மூலம் இறுககட்டாமல் இருந்ததால் அனைத்தும் மூட்டைகளும் சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் விழுந்து கிடந்த தவிட்டு மூட்டைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story