விபத்தில் பஸ் சேதம்


விபத்தில் பஸ் சேதம்
x

அருப்புக்கோட்டை அருகே நடைபெற்ற விபத்தில் பஸ் சேதமானது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

சென்னை ஒரகடத்தில் இருந்து காற்றாலைக்கு தேவையான காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த யோகனந்தன் (வயது 45) என்பவர் ஓட்டினார். அப்போது ராமனுஜபுரம் அருகே மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்த போது மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி வந்த அரசு பஸ் இந்த லாரியை முந்திச்செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்னால் லாரி உரசியதாக கூறப்படுகிறது. இதில் பஸ் சேதமடைந்தது. நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story