பஸ்-லாரி மோதல்; 15 பேர் காயம்


பஸ்-லாரி மோதல்; 15 பேர் காயம்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே பஸ்-லாரி மோதல்; 15 பேர் காயம் அடைந்தனர்.

கோயம்புத்தூர்

நெகமம்

பொள்ளாச்சியில் இருந்து வடசித்தூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த அரசு பஸ் நெகமத்தை அடுத்த கருமாபுரம் பிரிவு அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் லேசான காயம் அடைந்தனர்.

அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story