பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்


பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் படுகாயம்
x

பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்கு பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது நண்பர் சுடலை. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அம்பை ஆர்ச் அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள திருப்பத்தில் திரும்பும் போது, நெல்லை நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story