புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம்  மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:15 AM IST (Updated: 9 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பகுதிகளில் டவுன் பஸ்சில் பயணம் செய்ய ஏதுவாக புதுக்கோட்டை, ஈகரை, எழுவன்கோட்டை, தெண்ணீர் வயல், உடப்பன்பட்டி, நாச்சியாபுரம், ராம்நகர் ஆகிய பகுதிகள் வழியாக புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி அரசு பஸ்சை இயக்க உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டவுன் பஸ் புதிய வழித்தடத்தினை காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பூமிநாதன் முன்னிலை வகித்தார்.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சிங்காரவேலன், வணிக மேலாளர் நாகராஜன், தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், பஸ் நிலைய பொறுப்பாளர் சந்தியாகு, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, தேவகோட்டை நகர காங்கிரஸ் (கிழக்கு) தலைவர் சஞ்சய், மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திரன், இலக்கிய அணி செயலாளர் காரை சுவாமிநாதன், இளங்குடி முத்துக்குமார், வட்டார காங்கிரஸ் மனோகரன், தி.மு.க. கள்ளிவயல் பாண்டி, ஊராட்சிமன்ற தலைவர் பழனிச்சாமி, துணைத்தலைவர் காரை முத்து மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story