ரூ.9½ கோடியில் பஸ் நிலையம், வணிக வளாகம்


ரூ.9½ கோடியில் பஸ் நிலையம், வணிக வளாகம்
x

ஆற்காட்டில் ரூ.9½ கோடியில் பஸ் நிலையம், வணிக வளாகம் கட்ட அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 48 லட்சத்தில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கும், ஆற்காடு பஸ் நிலைய வளாகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின்கீழ் ரூ.6 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்கும் என மொத்தம் ரூ.9 கோடியே 48 லட்சத்தில் அடிக்கல் நாட்டும்நிகழ்ச்சி நடந்தது.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பூமி பூஜை செய்து அடிக்கல்நாட்டினார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும், கட்டிடப்பணிகளை தரமாக மேற்கொள்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மண்டல இயக்குனர் தனலட்சுமி, நகரமன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் கிருஷ்ணாராம், நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story