கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது - அமைச்சர் சேகர்பாபு


கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது - அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 4 Jan 2024 6:14 AM GMT (Updated: 4 Jan 2024 7:36 AM GMT)

கிளாம்பாக்கத்தில் காவல்நிலையம் அமைக்கும் பணி பொங்கலுக்கு பின் தொடங்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.

இந்த நிலையில், பொதுமக்களுக்கான வசதிகள் குறைவாக உள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வசதிகள், நடைபாதைகள் முறையாக தூய்மை செய்யப்படுகிறதா என பார்வையிட்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பள்ளி நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது. பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு பேருந்துகள் இயக்கப்படும்.புதிய ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் கட்டப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் காவல்நிலையம் அமைக்கும் பணி பொங்கலுக்கு பின் தொடங்கும். பயணிகளுக்கு இடையூறாக உள்ள சுவரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் கிளாம்பாக்கத்தில் 30% பணிகள் மட்டுமே நிறைவடைந்தன. மத்திய மந்திரி எல்.முருகன் பேருந்து நிலையைத்தை சுற்றிப் பார்த்து குறைகளை சொல்லலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story