கவுந்தப்பாடி அருகே பரபரப்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


கவுந்தப்பாடி அருகே பரபரப்பு  முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் திருவிழா

கவுந்தப்பாடி அருகே பி.மேட்டுப்பாளையத்தில் பிரசித்திபெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழாவில் பி.மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெரியமாரியம்மனை வழிபடுவது வழக்கம்.

இவர்களுக்கு மொட்டையடிக்கும் பணியில் பி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தாண்டுக்கான பொங்கல் விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

மொட்டையடிக்கும் உரிமை ஏலம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு மொட்டையடிக்கும் உரிமையை ஏலம் விட்டதால் அதற்கு முடிதிருத்தும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த ஆண்டும் உள்ளுர் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மொட்டை அடிக்கும் உரிமையை வழங்காமல் ஏலம் விட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், அந்த உரிமையை தங்களுக்கே வழங்கக்கோரியும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் நேற்று கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். மேலும் எதிர்ப்பு தெரிவித்து பேனரும் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம்

இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் கூறும்போது, 'பி.மேட்டுப்பாளையம் பெரியமாரியம்மன் கோவில் மற்றும் இந்த பகுதி மக்களையே நம்பி நாங்கள் தொழில் செய்து வருகிறோம். ஆனால் இந்த ஆண்டும் கோவில் திருவிழாவில் மொட்டை அடிக்கும் உரிமையை எங்களுக்கு தராமல் ஏலம் விட உள்ளனர். இதனை கண்டித்தும், மொட்டையடிக்கும் உரிமையை எங்களுக்கே வழங்கக்கோரியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டோம்' என்றனர்.


Related Tags :
Next Story