இடைத்தேர்தல்; அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் : அண்ணாமலை


இடைத்தேர்தல்; அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது, கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும் : அண்ணாமலை
x
தினத்தந்தி 23 Jan 2023 11:34 AM IST (Updated: 23 Jan 2023 12:32 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சி

தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவு செய்ய முடியாது. கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும்.

அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றியே முதன்மையான நோக்கம். திமுக - காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ளும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும். இடைத்தேர்தல் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்றார்.


Next Story