இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பு முனையாக அமையும்: கே.ஏ செங்கோட்டையன்


இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு  திருப்பு முனையாக அமையும்: கே.ஏ செங்கோட்டையன்
x

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நல்ல தீர்ப்பை வழங்குங்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்காளர்களிடம் கூறினர்.

ஈரோடு,

அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செ செங்கோட்டையன் தேர்தல் பிரசாராத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கும் விதமாக தேர்தலில் அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும். திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் இந்த தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பு முனையாக அமையும்.

யார் எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள். தேர்தல் கமிஷன் என்ன செய்து கொண்டு இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து நல்ல தீர்ப்பை வழங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story