கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்


கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நல்லுசாமி, பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கட்டண சேனல்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டர் கற்பகத்தை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story