கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்


கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2023 6:37 PM GMT (Updated: 2 Jan 2023 9:36 AM GMT)

அரியலூரில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

அரியலூர்

2022-ம் ஆண்டு முடிவடைந்து நேற்று 2023 புத்தாண்டு தொடங்கியது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக அரியலூரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் சிறுவர்கள், இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணிக்கு கூடினர். நள்ளிரவு கடிகாரத்தில் 12 மணியை தொட்ட உடனே பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகமாய் கொண்டாடினர். பிறகு ஒருவொருக்கு ஒருவர் கேக்கை ஊட்டிவிட்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் தங்களது வீடுகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு நேரத்தில் ஆர்வத்துடன் வண்ண வண்ண கோலங்களை போட்டனர். மேலும் பலர் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர், டெலகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்களுக்கு நள்ளிரவு முதலே பகிர்ந்து கொண்டனர். கேளிக்கை விடுதிகளில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டு வரவேற்கப்பட்டது.


Next Story