குடும்பப்பெண்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்


குடும்பப்பெண்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும்
x

குடும்பப்பெண்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்

குடும்பப்பெண்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கும் வகையில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிமைத்தொகை

தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு குடும்பத்தலைவிகளிடையே பலத்த வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தில் பங்கு பெற தகுதியான குடும்பத் தலைவிகளை தேர்வு செய்யும் வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக ஊராட்சி மற்றும் மாநகராட்சியில் குறிப்பிட்ட வார்டு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2-ம் கட்டமாக தற்போது நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியில் மீதமுள்ள பகுதிகளில் முகாம் அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு நேரடியாக வங்கிக்கணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தப்படவுள்ளது. முகாமில் விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கரண்ட் பில் கட்டிய ரசீது மற்றும் வங்கிக்கணக்குப்புத்தகம் ஆகியவை கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. ஆனால் சில பெண்களிடம் வங்கிக்கணக்கு இல்லாததால் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை உள்ளது.

வங்கி கணக்கு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வங்கிக்கணக்கு தொடங்க உதவி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவருக்கு வங்கிக்கணக்கு இருந்தால் போதும் என்று சொல்லப்பட்டது. இதனால் பல குடும்பத்தலைவிகள் தங்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கவில்லை. தற்போது வங்கிக்கணக்கு தொடங்குவதில் பல சிரமங்களை சந்திக்கின்றனர்.

எனவே பொதுமக்களுக்கு உதவும் வகையில் கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து வங்கிக்கணக்கு தொடங்க உதவி செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியான ஒரு குடும்பத்தலைவி கூட இந்த திட்டத்தில் விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. எனவே தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு அல்லது வங்கிக் கணக்கு உடனடியாக தொடங்க உதவும் வகையில் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து உதவலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story