அங்கக வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி முகாம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் நீடித்த நிலையான அங்கக வேளாண்மை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமை வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேராசிரியர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணன் ஆகியோர் இயற்கை வேளாண்மையில் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். உதவி பேராசிரியர்கள் ராஜபாஸ்கர், தங்கதுரை, மண்ணியல் இணை பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் அங்கக வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள் குறித்து விளக்கி பேசினார்கள். பயிர் பாதுகாப்பு, உர மேலாண்மை, பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம், இயற்கை இடுபொருட்களின் மூலம் விவசாய பணி, ஊடு பயிர் சாகுபடி, நீர் அறுவடை அமைப்பு குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து இந்த பயிற்சி முகாமில் விரிவாக விளக்கப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.