குமாரபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்


குமாரபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 11:19 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம் நடந்தது.

நாமக்கல்

குமாரபாளையம்:

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் ஆகியவை சார்பில் குமாரபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட காசநோய் துறை துணை இயக்குனர் டாக்டர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் பொதுமக்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார ஆய்வாளர் பிரவீன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story