காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்
x
தினத்தந்தி 2 Aug 2022 6:55 AM GMT (Updated: 2 Aug 2022 6:59 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்


காஞ்சீபுரம்,

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிபடுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவெவ்வேறு இடங்களில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1-ந் முதல் தொடங்க உத்தரவிட்டது.

அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து http://www.nvsp.in என்ற இணையதளத்திலும், Voter helpline என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கொண்டுவரும் படிவம் 6-பி யினை பூர்த்தி செய்து கொடுத்து தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையம், மக்கள் சேவை மையம் மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் அலுவலர்களை அணுகியும், ஆதார் எண்ணை சமர்பித்து அதனை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது


Next Story