நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாய் தூர்வாரி பராமரிக்க மக்கள் கோரிக்கை

நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாய் தூர்வாரி பராமரிக்க மக்கள் கோரிக்கை
x

குப்பைகளாலும், புதர் மண்டி கிடப்பதாலும் நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குப்பைகளாலும், புதர் மண்டி கிடப்பதாலும் நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

பறக்கின்கால் கால்வாய்

குமரி மாவட்டத்தில் ஏ.வி.எம்.கால்வாய், தோவாளை கால்வாய், பழையாற்று கால்வாய் உள்பட 10 பெரிய கால்வாய்கள் உள்ளன. அவற்றில் பழையாற்று கால்வாயின் கிளைக்கால்வாய் தான் பறக்கின்கால் கால்வாய் ஆகும்.

இந்தகால்வாய் ஒழுகினசேரி, சபரி தடுப்பு அணையில் இருந்து தொடங்கி, பறக்கின்கால், கம்பளம், பறக்கை இரட்டை குளத்தில் முடிவடைகிறது. இந்த கால்வாயில் தண்ணீா் செல்லும் போது மக்கள் குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் பறக்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த 1,573 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.

புதர்மண்டி கிடக்கிறது

அந்த அளவு மக்களுக்கு பயன்பட்டு வந்த பறக்கின்கால்வாயை முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே புதர் மண்டியும், மண் மேடாகவும், சில இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. மேலும் கால்வாயின் பெரும் பகுதி குடியிருப்புகள் வழியாக சென்றதால், வீடுகளில் சேரும் குப்பை மற்றும் கழிவுகளை வீசும் இடமாகவும் இந்த கால்வாய் மாறி விட்டது.

தண்ணீர் சென்ற கால்வாய் குட்டையாக மாறி, கழிவுநீர் செல்கிறது எனவே நாகர்கோவிலில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வரும் பறக்கின்கால் கால்வாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி, பராமரித்து, மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story