கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- மதுரை ஐகோர்ட் கிளை


கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து- மதுரை ஐகோர்ட் கிளை
x
தினத்தந்தி 28 July 2023 11:16 AM GMT (Updated: 28 July 2023 11:44 AM GMT)

கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கைதான 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது

மதுரை,

கரூரில் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது அதிகாரிகளை தாக்கியதாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியவர்கள் மீதான வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் அளித்தது ஏற்புடையதல்ல என்று வருமான வரித்துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, 19 பேருக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரும் 3 நாட்களில் சரண் அடையவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story