பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல முடிகிறது, மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட முடியவில்லை - கே.எஸ்.அழகிரி


பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல முடிகிறது, மணிப்பூர் சென்று அமைதியை நிலை நாட்ட முடியவில்லை - கே.எஸ்.அழகிரி
x

பிரதமரால் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

மணிப்பூரில் மெய்ட்டேய் சமூகத்துக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டேய் மற்றும் குக்கி சமூக மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தில் பெரிய வன்முறை வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையால் பலர் உறவுகளையும், உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து நிற்கின்றனர்.

இந்நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங், மணிப்பூரில் லாம்பலில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர்,

பிரதமர் நரேந்திர மோடியால் அமெரிக்கா செல்ல முடிகிறது; போபாலில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க செல்ல முடிகின்றது; ஆனால் மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்ட முடியவில்லை என விமர்சித்ததுள்ளார்.


Next Story