கார் மோதி தடுப்பு சுவர் சேதம்


கார் மோதி தடுப்பு சுவர் சேதம்
x

கார் மோதி தடுப்பு சுவர் சேதமானது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிறை நிா்வாகம் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் சாலையின் நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலை அந்த வழியாக வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் சிமெண்டு கான்கிரீட்டால் ஆன தடுப்பு சுவர் கட்டைகள் 3-க்கும் மேற்பட்டவை பெயர்ந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு போலீசார் ஒழுங்குபடுத்தி சேதமடைந்த தடுப்பு சுவரை எடுத்து வைத்தனர்.


Related Tags :
Next Story