மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x

ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பேர் பலியாகினர்.

அரியலூர்

கடலூர் மாவட்டம் டி.வி.புத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீசன் (வயது 45), பழமலை (40) ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலையில் உள்ள கருக்கை கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி திரும்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பழமலை, ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story