சிறுமியை கர்ப்பமாக்கிய கார் டிரைவர் கைது


சிறுமியை கர்ப்பமாக்கிய கார் டிரைவர் கைது
x

பாதிக்கப்பட்ட சிறுமி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

கடலூர்,

கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் சிலம்பரசன் (வயது 38). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் 16 வயது சிறுமியுடன் அடிக்கடி பேசி பழகி வந்தார். பின்னர் அந்த சிறுமியிடம் செல்போனில் பேசும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. அதன்பேரில் அந்த சிறுமி சிலம்பரசனுடன் பேசி வந்தார்.

சம்பவத்தன்று அந்த சிறுமிக்கு பிறந்த நாள் என்பதால், அவரை அக்கரைக்கோரி பீச்சுக்கு அழைத்துச்சென்று, அங்கு ஆள்இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல் பல முறை சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனை கைது செய்தனர்.


Next Story