ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்
கள்ளக்குறிச்சியில் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு கார்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு அலுவலக பயன்பாட்டிற்காக புதிய கார் வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியக்குழு தலைவர்களுக்கு அலுவலக பயன்பாட்டிற்காக கார்களை வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த கார்களை ஒன்றியக்குழு தலைவர்கள் கள்ளக்குறிச்சி அலமேலு ஆறுமுகம், சின்னசேலம் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் திலகவதி, கல்வராயன்மலை சந்திரன், தியாகதுருகம் தாமோதரன், திருக்கோவிலூர் அஞ்சலாட்சி, உளுந்தூர்பேட்டை ராஜவேல், ரிஷிவந்தியம் வடிவுக்கரசி, திருநாவலூர் சாந்தி ஆகியோர் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.