திருத்தணி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல் - 3 பேர் படுகாயம்


திருத்தணி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல் - 3 பேர் படுகாயம்
x

திருத்தணி அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தனன் (வயது 55). ஆடு வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வியாபாரத்திற்காக திருத்தணி அடுத்த சத்திரஞ்ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் பாலச்சந்திரன் (48), வேலு (49) ஆகியோரை சந்தித்தாா். பின்னர் நேற்று மாலை ஹர்ஷவர்தனனை பஸ் ஏற்றுவதற்காக பாலச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் வேலு, ஹர்ஷவர்தனனை ஏற்றிக்கொண்டு சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் அவர்களுக்கு தலை, கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story