கடலூரில் கார் டயர் வெடித்து விபத்து.. 3 பேர் பலி


கடலூரில் கார் டயர் வெடித்து விபத்து.. 3 பேர் பலி
x

விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்,

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். கார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் வந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story