வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு


வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
x

பொம்மிடி அருகே பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியை, சுரைக்காய்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 21) என்பவர் தினமும் இருசக்கர வாகனத்தில் சென்று காதலிக்க வற்புறுத்தி உள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து உள்ளார். அவ்வாறு இல்லையெனில் கொன்று விடுவதாக அந்த வாலிபர் மாணவியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பொம்மிடி போலீசில் புகாார் செய்தார். அதன் பேரில் போலீசார் பிரவீன் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story