சமையல் தொழிலாளி மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்து சமையல் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சமையலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையில் இருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் ஓட்டலில் சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து விஜய் சாப்பிட்டதற்கான பணத்தை கேட்டார். அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விஜயிடம் தகராறு செய்து விஜயை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த விஜய் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் மகராஜகடை போலீசார் மாணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story