அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது வழக்கு
x

திருவள்ளூரில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்சார திருத்த சட்டத்தை எதிர்த்து மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திடீரென திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கும் போக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story