கிராம நிர்வாக அதிகாரியை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு


கிராம நிர்வாக அதிகாரியை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு
x

கிராம நிர்வாக அதிகாரியை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் கிராமத்தில் உள்ள அத்துமன் ஏரியில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அனுமதி இன்றி சிலர் மண் அள்ளுவதாக கிராம நிர்வாக அதிகாரி ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்து ஏரிக்கு சென்று பார்த்தபோது இ.கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் நவமணி என்பவரின் பொக்லைன் எந்திரம் மூலம் 4 டிராக்டர்களில் மணல் அள்ள முற்பட்டது தெரிய வந்தது. இதில் ஈடுபட்ட ராசு மகன் குமார், மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் தமிழரசன், நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் அன்பரசன் ஆகியோரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து கிராம நிர்வாக அதிகாரி ரவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்களிடமிருந்து தப்பித்த ரவி இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.


Next Story