தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு


தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Jun 2023 12:45 AM IST (Updated: 20 Jun 2023 12:23 PM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே தாசில்தாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே மதவக்குறிச்சி பஞ்சாயத்தில் அரசு கலைக்கல்லூரிக்கான கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இதனை பார்வையிடுவதற்காக மானூர் தாசில்தார் முத்துலட்சுமி அங்கு வந்தார். அப்போது வெங்கலப்பொட்டலைச் சேர்ந்த யாக்கோபு (வயது 49), ஆறுமுகம் (45), முருகேசன் (35) மற்றும் சிலர் சேர்ந்து தடுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மானூர் தாசில்தார் முத்துலட்சுமி, தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story