பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை


பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு: இன்று விசாரணை
x

கரும்புடன் பொங்கல்பரிசு வழங்கக் கோரிய வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று அரசு கடந்த 22-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்பட உள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், "பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிட்டுள்ளோம். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் திருப்தியாக பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். பொங்கல் பண்டிகையையும், கரும்பையும் பிரிக்க முடியாது என்பதால், பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க கோரி டிசம்பர் 24-ந்தேதி தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.


Next Story