செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்


செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
x

செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது மகன் கோகுல் ஸ்ரீ (வயது 17). இவர் கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தாக்கியதில் கோகுல் ஸ்ரீ உயிரிழந்தார்.

இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை நடத்தினார். தொடர்ந்து கோகுல் ஸ்ரீயை அடித்துக் கொலை செய்த சிறுவர் சீர்திருத்த பள்ளியின் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், காவலர்கள் மற்றும் முடி திருத்துபவர் உள்ளிட்ட 7பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


Next Story